சமநிலையுடன் காணப்பட்ட பிக்பாஸ் சீசன் 2 : பன்னிரெண்டாம் நாள்!!- ( வீடியோ)

சண்டை, சமாதானம் என்று இரண்டு விஷயங்களிலும் பிக்பாஸ் வீடு இன்று சமநிலையுடன் காணப்பட்டது. பணியாளர்கள் – உதவியாளர்கள் போட்டி முடிந்த பிறகு ஒருவரையொருவர் கலாய்த்துக் கொண்டு ஜாலியாக விளையாடினார்கள்.

சில தனிப்பட்ட உரசல்களும் இருக்கத்தான் செய்தன. சிலரின் மோசமான குணங்கள் மேலும் அம்பலப்பட்டன. ‘அட’ என்று வியக்க வைக்கும் அளவிற்கு சிலரின் நேர்மை புலப்பட்டது.

பன்னிரெண்டாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பைப் பற்றிப் பார்ப்போம்.

பெண்கள் உதவியாளர்களாக இருக்கும் போது 07:30 மணிக்கே அடித்த அலாரம், ஆண்கள் உதவியாளர்களாக இருக்கும் போது எட்டு மணிக்கு அடித்தது. என்னவொரு பாரபட்சம்?

‘டங்காமாரி ஊதாரி’ என்கிற ஹைடெக் குத்துப்பாடல் ரகளையாக ஒலிக்க ஆரம்பித்தது. ‘அழுக்கு மூட்டை மீனாட்சி, மூஞ்சைக் கழுவி நாளாச்சு’ என்கிற வரி வரும் போது பல விடியாமூஞ்சிகளை காமிரா காண்பித்தது. பெண்கள் அணியுடன் இணையாமல் தனியாக ஆடிக் கொண்டிருந்தார் நித்யா.

ஜனனியின் கால் விரல்களுக்கு நெயில் பாலிஷ் வைத்துக் கொண்டிருந்தார் மஹத். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? கருவாடு வாசனைக்கு சுற்றும் பூனை போல, பெண்களின் பின்னாலேயேதான் சுற்றுகிறார் மஹத்.

யாஷிகாவின் பின்பக்கத்தை தடவிய இவர், இன்னொரு சந்தர்ப்பத்தில்  ‘கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என்று யாஷிகாவிடம் கேட்கிறார்.

‘ஈஷிகா’ என்று பெயரை மாற்றி விடலாம் எனுமளவிற்கு இவரிடம் ‘ஈஷிக்’ கொண்டேயிருக்கும் யாஷிகா, ஒரு சமயத்தில் ‘மஹத் என்னோட பிரதர்’ என்கிறார்.

என்னங்கடா நடக்குது இங்க?… இந்த லட்சணத்தில் ‘யாஷிகாவையும் மஹத்தையும் சேர்த்து’ பாத்ரூமில் தள்ளி விடுகிறார்களாம். அது ஒன்றுதான் பாக்கி.

‘நம்ம ஓவரா பண்றோம்-னு பாய்ஸ் டீம் சொல்றாங்க.. நம்ம என்ன அப்படியா பண்றோம்?” என்று ஜனனியிடம் வைஷ்ணவி சொல்லிக் கொண்டிருந்தார். ஆண்கள் செய்த அலப்பறைகளோடு ஒப்பிடும் போது பெண்கள் அணி மரியாதையாகத்தான் நடத்துகிறது என்பதே நாம் கண்ட காட்சிகளின் மூலம் உணர்ந்த உண்மை.

“நித்யா மாதிரி அடங்காம இருந்தியின்னா தூக்கிப் போட்ருவன் பார்த்துக்க’ என்று குக்கரிடம் பேசிக் கொண்டிருந்தார் பாலாஜி. முன்பே சொன்னது போல் கிச்சன் அமைந்திருக்கும் இடத்தின் வாஸ்து சரியில்லை. அந்த இடத்தில்தான் பெரும்பாலான சண்டைகள் உற்பத்தியாகின்றன.

அவமதிப்பான தோரணையுடன் பாலாஜி தந்த சாப்பாட்டை நித்யா உண்ண முடியாமல் அவதிப்பட்டார். அவரின் கோபம் நியாயமானது.

டேனி சமாதானப்படுத்தியதற்காக சிறிது சாப்பிட்டவர் மீதவுணவை குப்பையில் போட்டார். ‘சாப்பாட்டை யாராவது வீண் செய்வாங்களா.. எத்தனை பேர் சாப்பாடு இல்லாம கஷ்டப்படறாங்க தெரியுமா’ என்று இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஓவராக சீன் போட்டார் மஹத்.

‘நான் எச்சில் செய்ததை மற்றவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். அப்படி பயன்படுத்துவதிலும் எனக்கு விருப்பமில்லை. அதனால்தான் குப்பையில் போட்டேன்’ என்கிற நியாயமான காரணத்தை நித்யா சொன்னார். இதர சமயங்களில் சில உணவுகள் அப்படி வீணாகின்றன என்பதையும் சுட்டிக் காட்டினார்.

4_09301 ஜனனியின் கால் விரல்களுக்கு நெயில் பாலிஷ் வைத்துக் கொண்டிருந்தார் மஹத்!!: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? பிக்பாஸ் சீசன் 2 : பன்னிரெண்டாம் நாள்!!- ( வீடியோ) ஜனனியின் கால் விரல்களுக்கு நெயில் பாலிஷ் வைத்துக் கொண்டிருந்தார் மஹத்!!: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? பிக்பாஸ் சீசன் 2 : பன்னிரெண்டாம் நாள்!!- ( வீடியோ) 4 09301 e1530411203781

‘நாங்கள்லாம் எவ்ள கஷ்டப்பட்டு காலைல எழுந்திரிச்சு உணவு தயாரிச்சோம் தெரியுமா?” என்று புலம்பியது ஆண்கள் அணி. இதே ஆண்கள் வீடுகளில் ‘உணவு பிடிக்கவில்லை’ என்பதையொட்டி எத்தனை சண்டைகள் போட்டிருப்பார்கள், எத்தனை தட்டுகள் பறந்திருக்கும்?

ஆக.. தானே ஒரு பொருளை உருவாக்கும் போதுதான் அதன் அருமை நமக்குப் புரிகிறது. வீடுகளில் மீந்த உணவுகளை வீணாக்காமல் சாப்பிடுவது பெரும்பாலும் பெண்கள்தான்.

‘நீங்க எத்தனை பொருட்களை வீணாக்கியிருக்கிறீர்கள் என்று நான் சொல்லட்டுமா?” என்று நித்யா வலுவாக தன் தரப்பைச் சொன்னவுடன் அப்படியே அடங்கிப் போனார் மஹத். உரத்த குரலில் முதலில் கத்தி விட்டு, ‘என் கிட்ட பேசாதீங்க மஹத்’ என்று நித்யாவும் எகிறியவுடன் ‘என் கிட்ட மூஞ்சைக் காட்டாதீங்க’ என்று மஹத் சொன்னது ஓவர்.

மேலும். அப்போது அவர் ‘உதவியாளர்’ மோடில் இருந்ததையும் மறந்து விட்டார் போலிருக்கிறது. எந்த வீட்டில் முதலாளி சாப்பாடு கொட்டியதற்காக, வேலைக்காரர் சத்தம் போடுவார்?

இதைப் போலவே பாலாஜி – நித்யா பிரச்னையை நியாயத்தோடு அணுகுகிற இன்னொரு நபர் சென்றாயன். ‘பாலாஜி பேசும் வார்த்தைகள் எல்லாம் விஷம் போன்றது” என்றவர் ‘காமெடி வேற.. ஃபேமிலி’ என்கிற தத்துவத்தையும் உதிர்த்து விட்டு, ‘மற்ற பெண்களின் முன்னால் நித்யாவை அவமதிப்பது சரியல்ல’ என்று பேசி நித்யாவிற்கு ஆதரவு தந்தார்.

‘சிறந்த எஜமானிகளாக நித்யா, வைஷ்ணவி, மமதி’ ஆகிய மூன்று நபர்களை தேர்ந்தெடுக்காதீர்கள்’ என்று ஜனனி, ரம்யாவிடம் ‘பாலிட்டிக்ஸ்’ செய்து கொண்டிருந்தார் மஹத்.

‘நான் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் திரைத்துறையில் என்னைப் பற்றி ஒரு வம்பு கூட வந்தது கிடையாது. சில பேருக்குத் தோன்றலாம், திரைப்படங்களில் அப்படி கவர்ச்சியாக தோன்றி விட்டு, ஒரு புடவை மாற்றுவதற்கு இப்படி ‘சீன்’ போடுகிறாரே.. என்று.. காலம் கடக்கும் போது, மதத்தில் அதிக நம்பிக்கை உருவாகும் போது.. அது சார்ந்த முதிர்ச்சியும் வந்து விடுகிறது.

தொலைக்காட்சியில் என்னுடைய பாடல்கள் ஒளிபரப்பாகும் போது என் வீட்டுப் பிள்ளைகள் அதைப் பார்ப்பதை நான் விரும்பமாட்டேன்’ என்று மும்தாஜ் வைஷ்ணவியிடம் பேசிக் கொண்டிருந்தார்.

‘ஆமாம்.. நான் கூட சொன்னேன். ‘மல.. மல.. பாட்டுக்கெல்லாம் அப்படி ஆடிட்டு… ஒரு புடவை கட்டறதுக்கு இப்படி பண்றாங்களேன்னு’’ என்று பதிலளித்த…வைஷ்ணவி, ‘அது அப்போது உங்கள் சாய்ஸ்’ என்பது மாதிரி இன்னொருபுறமாகவும் பேசினார்.

வைஷ்ணவியின் இந்த இரட்டை நிலையைப் பற்றி மற்றவர்கள் தொடர்ந்து புறம்பேசிக் கொண்டேயிருந்தார்கள். ஒரு சமயத்தில் வைஷ்ணவியின் தோற்றத்தைப் பற்றி மலினமான கிண்டலைச் சொன்னார் பாலாஜி.

7_09113 ஜனனியின் கால் விரல்களுக்கு நெயில் பாலிஷ் வைத்துக் கொண்டிருந்தார் மஹத்!!: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? பிக்பாஸ் சீசன் 2 : பன்னிரெண்டாம் நாள்!!- ( வீடியோ) ஜனனியின் கால் விரல்களுக்கு நெயில் பாலிஷ் வைத்துக் கொண்டிருந்தார் மஹத்!!: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? பிக்பாஸ் சீசன் 2 : பன்னிரெண்டாம் நாள்!!- ( வீடியோ) 7 09113 e1530412381827

பெண்கள் எஜமானர்களாக இருந்த விளையாட்டு முடிவிற்கு வந்தது. ‘நாங்கல்லாம் ரெண்டு நாள் செஞ்சோமே’ என்கிற மெல்லிய முனகல் பெண்கள் தரப்பிடமிருந்து வந்ததை எவரும் கவனிக்கவில்லை.. ‘சரியாக வேலை செய்யாத பணியாளரை’ பெண்கள் அணி கூடி ஆலோசித்து தேர்ந்தெடுத்தது.

‘உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ‘அனந்த்’ தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்பே குறிப்பிட்டபடி நித்யாவிடம் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை தொடர்ந்து இறைத்த பாலாஜிதான் நியாயமான தேர்வாக இருநதிருக்க வேண்டும். சிறந்த எஜமானி ‘ரித்விகா’வாம். எப்படித்தான் யோசிக்கிறாங்களோ..

ஆக.. அனந்த் அடுத்த வார நாமினேஷனிற்கு அனந்த் நேரடியாக செல்வார். இதைப் போலவே அடுத்த வார நாமினேஷில் ‘ரித்விகா’வின் பெயரை சொல்ல முடியாது.

‘சிறந்த எஜமானர்களாக’ இருந்த ஆண்களுக்கு லக்ஸரி 1600 மதிப்பெண் முழுமையாக வழங்கப்பட்டது. ஆனால் பெண்கள் எஜமானர்களாக இருக்கும் போது சரியாக நிர்வகிக்காததால் வெறும் 200 மதிப்பெண்கள் மட்டுமே.

ஆண்கள்தான் அதிக அலப்பறைகள் செய்தார்கள் என்பதற்கு இதை விடவும் அதிக சாட்சியம் தேவையில்லை. எவர் மற்றவர்களை அதிகமாக tease செய்கிறார்களோ, அவர்களே சிறந்தவர் என்பது பிக்பாஸ் வீட்டு லாஜிக்.

தொடர்ந்து தொடரை வீடியோவில் பார்வையிடுங்கள்…