குழந்தைகளுக்கு சங்கீதக் கல்வியின் அனுகூலம் குறித்து விஞ்ஞானம்!

குழந்தைகளுக்கு சங்கீதக் கல்வி வழங்குவது வெறுமனே இன்னிசையையும் சந்தத்தையும் வழங்குவது மட்டுமன்றி அதற்கப்பால் அவர்களின் மொழித்திறனையும் விருத்திசெய்வதாக விஞ்ஞானம் சொல்கிறது.

வாத்தியக்கருவி பயில்வதானது மொழ்த்திறனில் தாக்கம் செலுத்துவது பல ஆய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், அறிவாற்லை ஊக்குவிப்பதில் அதன் விளைவு தொடர்பாக விளங்கிக்கொள்ளப்படாமலே இருந்தது.

தற்போது நாம் அதற்குரிய விடையை அண்மித்துள்ளோம். இவ்விடையானது Robert Desimone எனும் நரம்பில் விஞ்ஞானியால், 74 சீன மழலையர் பள்ளி மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்தே கிடைக்கப்பெற்றுள்ளது.

சிறுவர்கள் பரவலான அறிவுத்திறனில் பாரிய வேறுபாட்டைக் காட்டியிருக்கவில்லை, இருப்பினும் சொல் வேறுபடுத்தலில் சில விருத்திகளை இனங்காண முடிந்திருந்தது, முக்கியமாக மெய்யெழுத்துக்களில்.

பியானோ இசைக்குழுவினரால் வெளிக்கொனரப்பட்ட முன்னேற்றங்கள் இங்கு தரப்படுகின்றன.

மேற்கொள்ளப்பட்ட ஆயிவில் சீன கல்வியல் முறை சார்ந்த மாணவர்கள் தெவிவுசெய்யப்பட்டிருந்தனர். 4 – 5 வயதான மாணவர்கள் 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.

ஒரு குழுவினர் 45 நிமிட இசையினை வாரத்திற்கு 3 தடவைகள் செவிமடுக்கச் செய்யப்பட்டிருந்தனர். மற்றைய குழுவினர் வாசிப்புப் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மூன்றாவது குழுவினர் கட்டுப்பாட்டுக் குழுவாக பேணப்பட்டிருந்தனர், இவர்கள் நாளாந்த சாதாரண செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இச் செயற்பாடு 6 மாதங்களுக்கு தொடரப்பட்டிருந்தது. முடிவில் அவர்கள் பரிசீலிக்கப்பட்டிருந்தனர். இங்கு மாணவர்களின் தொனிகள், உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்துக்களின் அடிப்படையில் சொற்களை வேறுபடுத்தும் ஆற்றல் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன.

இதன் முடிவில் பியானோ இசைக்கு வெளிக்காட்டப்பட்ட மாணவர்கள் திறம்பட செயற்படுவது அவதானிக்கப்பட்டிருந்தது.

இதிலிருந்த விஞ்ஞானிகள் கூறுவது, பெரும்பாலான பாடசாலைகள் பின்பற்றும் மாணவர்களுக்கு மேலதிக வாசிப்பு பயிற்சிகளில் ஈடுபடத்துவதென்பது பிரயோசனமற்றது.