தாய்லாந்தின் குகையொன்றில் சிக்கியுள்ள இளைஞர் கால்பந்தாட்ட அணியொன்றை சேர்ந்தவர்களை மீட்பதற்கான அந்நாட்டின் மீட்பு பணியாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.
11 முதல் 16வயதுடைய குழுவினர் தங்கள் பயிற்சியாளர்களுடன் தாய்லாந்தின் சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தம் நொன் குகைக்குள் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.எனினும் கடும் மழை வெள்ளம் காரணமாக குறிப்பிட்ட குழுவினர் குகைக்குள் சிக்குண்டுள்ளனர்.
சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் குறிப்பிட்ட குகைப்பகுதிக்கு செல்வதற்கு சிறிய ஆற்றை கடக்கவேண்டும் எனினும் வெள்ளம் காரணமாக அது சாத்தியமற்றதாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை மாலை காலபந்தாட்டா அணியை சேர்ந்தவர்கள் குகைக்குள் சென்றிருக்கவேண்டும் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர்கள் காணாமல்போயுள்ளனர் என்ற தகவலை தொடர்ந்து மீட்பு பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்ததாகவும் அவ்வேளை குகைப்பகுதியில் சைக்கிள் ஒன்றை மீட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தாய்லாந்தின் கடற்படையின் நீருக்கடியில் செயற்படும் பிரிவினர் குகைக்குள் சென்றுள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.