பிரித்தானிய இளவரசி மெர்க்கலை முத்தமிட்ட அந்த நபர் யார்?

பிரித்தானிய இளவரசர் ஹரி – மெர்க்கல் தம்பதியினர் கடந்த வாரம் திருமணம் ஒன்றில் கலந்துகொண்டனர்.

ஹரியின் தாய் டயானாவின் மூத்த சகோதரியின் மகள் திருமணம் ஆகும். இந்த திருமணத்தில் மெர்க்கலை நபர் ஒருவர் முத்தமிட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

மெர்க்கலை முத்தமிட்ட நபர் யார்? என்ற கேள்வி எழுந்ததையடுத்து, இவர் டயானாவின் சகோதரரின் மகன் ஆவார்.

இவரது பெயர் Louis Spencer (24). இவர்தான் இளவரசர் ஹரி – வில்லியமின் முதல் சகோதரர் ஆவார்.

இவரது தந்தையும் தாய் விக்டோரியாவும் விவாகரத்து செய்துகொண்டனர். தனியாக வசித்து வரும் இவர், இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கலின் திருணத்திற்கு தனது சகோதரிகள் மற்றும் தாயுடன் கைகோர்த்து கொண்டு வந்து அசத்தியுள்ளார்.

இவர் இளவரசர் ஹரிக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் மெர்க்கலுக்கு முத்தமிட்டுள்ளார்.