நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதம் உச்சகட்டத்தை அடைந்திருந்த சமயத்தில், திடீரென அரசியல் கருத்துக்களை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்கெட்டு கிடப்பதாகவும், சிஸ்டம் சரியில்லை, சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனால் அரசியலுக்கு வரப்போவதை சூசகமாக தெரிவித்திருந்தார்.
அவர் அரசியல் பணம் உறுதி ஆகிவிட்டதாகவே பெரும்பாலான ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றார் ரஜினி. இதன்மூலம் தேர்தல் சமயத்தில் அவர் அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று பரவலாக பேசப்பட்டுவருகிறது.
இந்நிலையில் பிரபல ஜோதிட வல்லுநர் ஞானேஸ்வரர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்தாண்டுக்கான அரசியல் நிலைமை எப்படி இருக்கும், இதற்கு முன் அவர் கூறிய ஜோதிட பலன் எந்த அளவுக்கு உண்மையானது என்பது குறித்து பேசினார். அவர் கூறியதாவது:
‘தெலுங்கில் பிரபல நடிகர் சிரஞ்சீவி, தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் அரசியலுக்கு வருவார்கள் என்று நான் முன்னரே கூறியிருந்தேன். முதலில் நடிகர் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்தார், தற்போது ரஜினி வந்துள்ளார்.
இதே போல், பிரிவினையாகாத ஆந்திராவில் காங்கிரஸ் தான் ஆட்சி அமையப்போகிறது என்று கணித்திருந்தேன். நான் கணித்தபடியே 2009ம் ஆண்டு ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலிலும், அமெரிக்க அதிபர் தேர்தலிலும் நான் கணித்தாவாறே மோடி, டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றனர்.
இப்போது மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வருங்காலத்தில் பிரதமர் ஆகும் வாய்ப்பு, ஐஸ்வர்யா ராய்-இன் மகளும் அமிதாப் பச்சனின் பேத்தியுமான ஆராத்யாவுக்கு உள்ளது.
ஆராத்யா தன்னுடைய பெயரை ரோகினி என்று மாற்றிக் கொண்டால் இது கண்டிப்பாக நிகழும். இதே போல், தமிழகத்தில் வரும் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தான் வெற்றி பெற்று, முதல்வராவார். மேலும், 2024ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடக்கலாம்’என்று அவர் கலந்துரையாடி உள்ளார்.