விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். இதை இவர் நாளைக்கு எதற்காக பயன்ப்படுத்த போகின்றார் என்பது பற்றியெல்லாம் தெரியவில்லை.
ஆனால், அவருக்காக எதையும் செய்ய ஒரு கூட்டம் உள்ளது, அந்த கூட்டம் அன்பு என்ற பெயரில் ஒரு சில நேரங்களில் எல்லை மீறி விஜய்க்கே கெட்ட பெயரை வாங்கி தருகின்றது.
அப்படித்தான் நேற்று ரஜினியின் பேனரை விஜய் ரசிகர்கள் கிழிக்க, இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதில் குறிப்பாக விஜய்யின் நண்பரான ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்ராஜே தன் டுவிட்டர் பக்கத்தில் ‘கர்ம வினைகள் தான் பதில் சொல்லும்…. காரியங்கள் சொல்லாது… கருட புராணம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதை பார்த்த பலரும் இவர் விஜய் ரசிகர்களை தான் வெளிப்படையாக தாக்குகின்றார் என கூறி வருகின்றனர், அதை அவரும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்ம வினைகள் தான் பதில் சொல்லும்…. காரியங்கள் சொல்லாது… கருட புராணம்….:)))
— N.Nataraja Subramani (@natty_nataraj) 22 June 2018






