மகனுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்: அதிர்ச்சி சம்பவம்

சேரைல் டாம்ப்செட் (42) இவர் தனது ஐந்து வயது மகன் லியோவுடன் Beachy Head cliffs மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த மரணத்தை கொலை மற்றும் தற்கொலை என்று காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

கென்ட்டில் உள்ள மெய்ட்ஸ்டோன் பகுதியை சேர்ந்த இவர்கள் உடல்கள் அவசரநிலை கண்காணிப்பு குழுவினர் மூலம் கண்டெடுக்கப்பட்டது.

நேற்று காலை ஆறு மணி அளவில் ஒரு பெண்ணையும் குழந்தையையும் மலை உச்சியில் பார்த்ததாக பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் இவர்கள் இருவரையும் தேடினர். அங்கு கடற்கரை யோரத்தில் சேரைல் உடலையும் குழந்தையின் உடலையும் கண்டுபிடித்தனர்.

இந்த தேடுதலுக்கு ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது

இந்த தகவல் தெரிந்த உடன் தற்கொலை செய்து கொண்ட டாம்ப்செட் உடன் பணிபுரிந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம் டாம்ப்செட் இளவயதினருக்கான மனநல ஆலோசகராக பணி புரிந்தவர். அவரது இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குழந்தை லியோவின் தந்தையால் இன்னமும் துக்கத்தில் இருந்து மீள முடியவில்லை.

மகன் இறந்த துக்கம் தாளாமல் எங்கள் ஒளிபொருந்திய நட்சத்திரம் தனது வாழ்வை முடித்து கொண்டது என்று தனது இரங்கல் செய்தியில் கூறியிருக்கிறார்.

இந்த மரணம் தொடர்பாக இதுவரை வேறு யாரையும் பொலிஸார் சந்தேகப்படவில்லை. இருப்பினும் விசாரணை தொடர்வதாக காவல்துறை அதிகாரி Simon Dunn கூறியிருக்கிறார்.