இலங்கையின் பிரபல நடிகையான உதாரி பெரேரா அழகு கலை நிலையத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாவலப்பிட்டியில் உள்ள அழகு கலை நிலையத்திற்கு இன்று காலை குறித்த நடிகை சென்றுள்ளார்.
அழகு கலை நிலையத்தில் இருந்த பெண்ணுக்கு, குறித்த நடிகையை நீண்ட காலம் தெரியும் என்பதனால், அவரது வேலைகளை வேகமாக செய்து கொடுத்துள்ளார்.
திடீரென அழகு கலை நிலையத்தில் இருந்த பெண்ணுக்கும் நடிகைக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலையத்தில் சேவை செய்யும் ஊழியர்கள் இந்த வாய்த்தகராறினை நிறுத்துவதற்கு முயற்சித்துள்ளனர்.
வாய்த்தகராறு நீடித்தமையினால் குறித்த நடிகையின் கழுத்தை பிடித்து வெளியே விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கக்பபடுகின்றது.