யாழில் காயமடைந்தவரை கூட்டிச் சென்றவர் ஏக்கத்தில் மரணம்…!

அரி­யா­லை­யில் மாம­ரத்­தில் இருந்து வீழ்ந்­த­வரை முச்­சக்­கர வண்­டி­யில் ஏற்­றிச் சென்­ற­வர் ஏக்­கத்­தில் உயி­ரி­ழந்­தார். மரத்­தால் வீழ்ந்­த­வர் ஆபத்­தான நிலை­யில் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.கண்டி வீதி அரி­யாலை யாழ்ப்­பா­ணம் என்­னும் முக­வ­ரி­யைச் சேர்ந்த பொன்­னுத்­துரை சிங்­க­ராசா (வயது-78) என்ற முதி­ய­வரே உயி­ரி­ழந்­துள்­ளார்.முதி­ய­வர் ஒரு­வரை அழைத்து மாம­ரத்­தில் ஏற்றி மாங்­காய் நேற்­றுப் பறித்­துள்­ளார். மரத்­தில் ஏறி­ய­வர் கை தவறி கீழே வீழ்ந்­துள்­ளார். அவ­ச­ர­மாக முச்­சக்­கர வண்­டியை அழைத்து மரத்­தால் வீழ்ந்­த­வரை ஏற்றி யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு முதி­ய­வர் கொண்டு சென்­றுள்­ளார்.

வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லும் வழி­யில் இரு­வ­ரும் உரை­யா­டி­யுள்­ள­னர். வைத்­தி­ய­சா­லையை அண்­மித்­த­போது, காய­ம­டைந்­த­வ­ரும் முதி­ய­வ­ரும் மயக்­க­ம­டைந்­துள்­ள­னர். முச்­சக்­கர வண்­டிச் சாரதி இரு­வ­ரை­யும் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்த்­துள்­ளார்.

மரத்­தில் இருந்து வீழ்ந்­த­வர் மயக்­க­முற்ற நிலை­யி­லும் அவரை அழைத்து வந்த முதி­ய­வர் இதய பல­வீ­னத்­தி­னால் ஏக்­கத்­தின் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளார். உயி­ரி­ழந்­த­வ­ரின் இறப்பு விசா­ர­ணையை திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறேம்­கு­மார் மேற்­கொண்­டார்.