மைனர் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சினிமா பிரமுகர்!

இப்போதெல்லாம் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. மும்பையை சேர்ந்த இளம் பெண் கடத்தி கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பெண்ணுக்கு வயது 17. மும்பை அந்தேரி பகுதியில் அவர் ஓட்டல் அருகே சுயநினைவில்லாமல் கிடந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அப்பெண்ணை சினிமா பட ஒளிப்பதிவாளர் ஆதித்யா குப்தா சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு வெளியே கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் அப்பெண்ணின் பெற்றோர் போலிசில் அளித்த புகாரின் பேரில் குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளாராம்.