விஜய் சொன்ன விசயம் என்னை அர்த்தமுள்ளவனாக்கியது! பிரபல நடிகர் பெருமிதம்

விஜய் அமைதியாக இருப்பார், பேசமாட்டார் என பலரும் பரவலாக சொல்லும் விசயம். ஆனால் உண்மை அது இல்லையாம். அவருடன் பேசினால் மிக நல்ல அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.

அண்மையில் பிரபல நடிகர் அருண் விஜய் தன் ரசிகர்களுடன் Chat ல் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் விஜய்யின் தன் அனுபவம் பற்றி கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அவர் நிறைய இருக்கிறது. ஆனால் நான் அவர் வீட்டுக்கு நேரடியே சில வருடங்களுக்கு முன் சென்றேன். அப்போது கொஞ்சம் சிக்கல்களில் இருந்தேன். அவருடையே தேதிகள் என்னுடன் ஒத்துப்போகவில்லை.

இதுகுறித்து பேசினேன். அப்போது அவர் நிறைய பேசினார். நான் யார் என உணரமுடிந்தது. அவரின் அறிவுரைகளை என்னால் மறக்க முடியாது. அதற்காக அவருக்கு நன்றி சொல்கிறேன்.