நெல்லை மாவட்டம் களக்காடு அருகே குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்ட கணவனை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
புலவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ஜனார்தனன், தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி ராஜாமணியை அடிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் வழக்கம்போல் குடித்து விட்டு வந்த ஜனார்த்தனன், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதோடு, வீட்டில் இருந்த பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளார்.
அவர் வீடு திரும்பியதும் மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராஜாமணி, ஜனார்த்தனனை மண்வெட்டியால் அடித்துக் கொன்றுள்ளார். ராஜாமணியை கைது செய்த சேரன்மகாதேவி காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.