இந்தியளவில் விஜய்க்கு மட்டுமே கிடைத்த சிறப்பு..

தளபதி விஜய் உலகம் முழுவதும் தனக்கென மாபெரும் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர். வரும் ஜூன் 22-ல் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.

அதற்காக ரசிகர்கள் அனைவரும் புதுப்புது போஸ்டர், பேனர், காமன் Dp என பல்வேறு வகையில் இணையத்தில் கலக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தளபதி விஜயின் பிறந்த நாளிற்காக இயக்குனர் அட்லீ நேற்று விஜய் ரசிகர்களுக்காக காமன் DP ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இதனை தற்போது வரை இந்த காமன் DP-யை 11,000 க்கும் அதிகமானோர் ரி-ட்வீட் செய்துள்ளனர், இந்தியாவிலேயே ஒரு நடிகரின் பிறந்த நாள் DP-க்கு இவ்வளவு ரி-ட்வீட் கிடைத்து இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.