ஒரே நாளில் உலக பிரபலமான நபர்… இவர் வெளியிட்ட காணொளியில் என்னதான் இருக்குது?

ஓட்டல் ஒன்றில் வேலை கேட்கும் நபர் ஒருவரின் வீடியோ இணையதளங்களில் மிகவும் தீயாய் பரவி வருகிறது

இந்தியாவில் சேலம் பகுதியை சேர்ந்த சூரமங்களத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் ஓட்டில் ஒன்றில் வேலை கேட்கின்றார். அவர் தனது வேலைக்கு சம்பளமாக பணம் எதுவும் வேண்டாமாம்.

அதற்கு பதிலாக காலையில் நாட்டுக்கோழியுடன் சாப்பாடு, மதியம் வஞ்சிர மீன் குழம்பு சாப்பாடு, இரவில் வெள்ளாட்டு கறியுடன் கூடிய சாப்பாடு போதுமாம். மேலும் இரவில் சாப்பிடுவதற்கு முன் நான்கு பாட்டில் மேன்ஸ்ஹவுஸ் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

தான் ஓட்டலில் எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன் என்றும், தனக்கு வேலை கொடுத்தால் ஒரே மாதத்தில் முதலாளியை தூக்கி மேலே கொண்டு வந்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த மாதிரி ஆளுக்கு வேலை கொடுத்தால் முதலாளி ஒரே மாதத்தில் ஓட்டலை மூடிவிட்டு செல்ல வேண்டியதுதான் என்று நெட்டிசன்கள் கமெண்ட்டுக்களை அளித்து வருகின்றனர்.