கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்!!

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகமதாபாத் : உலகிலேயே மிக அதிக வெட்டுக்களை(6690) உடைய வைர மோதிரம் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மோதிரம் குஜராத் மாநிலத்தில் ஏலத்திற்கு வர உள்ளது.

தாமரை போன்று தோற்றம் அளிக்கும் அந்த மோதிரத்தில் 36 இதழ்கள் இடம்பெற்றுள்ளது. இதன் மொத்த எடை 58 கிராம் ஆகும். விஷால் மற்றும் குஷ்பூ விஷால் எனும் தம்பதியர் வடிவமைத்த இந்த மோதிரத்தின் மதிப்பு சுமார் ரூ.27 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
201806171535146824_Wonder-diamond-ring-already-in-Guinness-Records-to-be_SECVPF.gif கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்!! கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் குஜராத்தில் ஏலம்!! 201806171535146824 Wonder diamond ring already in Guinness Records to be SECVPF
இருப்பினும், ஏலத்தின் போது மோதிரத்தின் ஆரம்பகட்ட விலை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வைர மோதிரம் என்பதால் இதனை வாங்க இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ளவர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.