பிரதி விவசாய அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பிரான அங்கஜன் இராமநாதனுக்கு யாழில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
பிரதி அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதற் தடைவயாக யாழ் கோவில் வீதியிலுள்ள அவருடைய அலுவலகத்திற்கு இன்று சனிக்கிழமை காலை வருகை தந்திருந்தார்.
இதன் போது அங்கு திரண்டிருந்த கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள், மலர்மாலைகள் அணிவித்தும் பொன்னாடைகளை அணிவித்தும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் தொண்டர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.










