கையெழுத்து போடுவதற்கு முன் மேஜையில் இருந்த பேனாவை மாற்றிய கிம் சகோதரி!

சிங்கப்பூரில் நடந்த பேச்சுவார்த்தையின் போது வடகொரியா ஜனாதிபதியின் சகோதரி அங்கு இருந்த பேனாவை மாற்றியது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களுக் முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து கையெழுத்திட்டனர். அப்போது ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவதற்காக இருநாட்டு தலைவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் பேனா வைக்கப்பட்டது.

ஆனால் கிம் சகோதரி உடனடியாக மேஜையில் இருந்த பேனாவை எடுத்து தனியாக வைத்துவிட்டு, அவர் வைத்திருந்த பேனாவை சுத்தப்படுத்தி கொடுத்தார்.

கிம் ஏன் அங்கிருந்த பேனாவை பயன்படுத்தவில்லை, சகோதரி பேனாவை பயன்படுத்தினார் என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இது குறித்து John Pike என்ற அதிகாரி கூறுகையில், பேனாவில் கருவியை பொருத்தி ஒருவரின் உடலில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது, அவரின் உடல்நிலை எப்படி இருக்கும் என்பதை அறியமுடியும், என்பதால் பாதுகாப்பு காரணுங்களுக்காகவே பேனாவை கிம் மாற்றியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிம் பற்றிய பெரும்பாலான தகவல்கள் எதுவும் உறுதியாக கிடைக்கவில்லை. இதனால் அவர் பற்றி ஏதேனும் ஒரு தகவல் கிடைத்துவிடாதா என பலரும் காத்து கொண்டிருக்கின்றனர்.

இதன் காரணமாக தன்னைப் பற்றி எந்த ஒரு விடயமும் வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதில் கிம் கவனமாக இருப்பவர் என்பதால், இதிலும் அதே முறையைத் தான் பின்பற்றியுள்ளார் என கூறப்படுகிறது.