சிங்கப்பூரில் வடகொரிய ஜனாதிபதியை சந்திக்க வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, அந்நாட்டின் அமைச்சரும், தமிழருமான விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.
வடகொரிய, அமெரிக்க நாடுகளின் ஜனாதிபதிகள் உலக அமைதிக்கான பேச்சுவார்த்தைக்காக சிங்கப்பூரில் சந்திக்க உள்ளனர். இதற்காக முதலில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சிங்கப்பூர் சென்றடைந்தார்.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் சிங்கப்பூர் சென்றார். அங்கு அவருக்கு சிங்கப்பூர் அமைச்சரும், தமிழருமான விவியன் பாலகிருஷ்ணன் சிறப்பான வரவேற்பு அளித்தார்.
உலகமே இருநாட்டு ஜனாதிபதிகளின் பேச்சுவர்த்தையை எதிர்நோக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.







