கன மழைக்கு நடுவே சாலையில் தகாத முறையில் நடந்து கொண்ட வெளிநாட்டு ஜோடியை பொலிசார் எச்சரித்து நாட்டுக்கே திரும்பும் படி கூறியுள்ளனர்.
மும்பையில் நேற்று முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. இரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
விமானநிலையங்களுக்கு வந்து சேர வேண்டிய விமானங்கள், வேறு பகுதிகளுக்கு திசை திருப்பிவிடப்பட்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து இன்றும் நாளையும் மித மிஞ்சிய கனமழை பெய்யும் என்பதால் வீட்டிலிருந்து யாரும் வர வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இப்படி மும்பையே வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், ரஷ்யாவில் இருந்து மும்பைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டுத் தம்பதி மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், சாலையில் எல்லை மீறி நடந்து கொண்டனர்.
அதாவது சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் தகாத முறையில் நடந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலை வழியே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசார், இவர்களை கண்டவுடன் கூச்சலிட்டுள்ளனர்.
ஆனால் அவர்களோ இதை கண்டு கொள்ளாமல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த பொலிசார், உடனடியாக ரோந்து வாகனத்தில் இருந்து இறங்கி சத்தமிட அதன்பின்பே அந்த ஜோடி அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து பொலிசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ரஷ்யாவை சேர்ந்தவர்கள் என்றும், மும்பைக்கு சுற்றுலாவிற்கு வந்ததாகவும் கூறியுள்ளனர்.
அவர்களது பாஸ்போர்ட்டை சரி பார்த்த பொலிசார் மும்பை மழை குறித்து எச்சரித்து அவர்களை உடனடியாக நாடு திரும்பும் படி அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் இது தொடர்பான காட்சிகளை அங்கிருப்பவர்கள் புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.






