காலா பட்ஜெட் இவ்வளவா? எல்லாம் போச்சா?

தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா. இந்த படம் வரும் ஜூன் 7-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

ஆனால் காவிரி விவகாரத்தால் கர்நாடகாவில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் தனுஷ் கர்நாடக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதனையடுத்து தற்போது தனுஷ் நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில் காலா படம் ரூ 140 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இதனால் படக்குழுவினரின் நலன் கருதி கர்நாடகாவில் படத்தை வெளியிட வழி செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

இதனால் காலா சுமாரான பட்ஜெட் படம் தான் என நினைத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது மிக பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

kaala