மும்பை தாராவி செட் உருவானது எப்படி?? காலாவின் மேக்கிங் வீடியோ வெளியீடு

ஜூன் 7ம் தேதி ’காலா’ படம் திரைக்கு வரவுள்ள நிலையில்இ அப்படத்தின் மேக்கிங் வீடியோ யூ-டியூப் வலைதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகியுள்ள ’காலா’ திரைப்படம், தமிழக ரசிகர்கள் உட்பட இந்திய திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

சமீபத்தின் வெளியிடப்பட்ட ’காலா’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் பெரிய வரவேற்பை பெற்றன. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

மும்பையில் வசிக்கும் தமிழர்களை பற்றிய படமாக உருவாகியுள்ள ’காலா’ படத்தின் ரஜினிகாந்துடன், ஈஸ்வரி ராவ், ஹியூமா குரேஷி, சமுத்திரகனி, நானே பட்டேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மும்பை நகரத்தில் நடைபெறும் கதையாக இருந்தாலும், அங்கு ரஜினி படம் என்பதால் மக்களின் கூட்டம் அதிமாக இருந்தது. இதனால் காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையிம் முழுமையாக எடுக்க முடியவில்லை.

இதன் காரணமாக படக்குழுவினர் மும்பை தாராவி பகுதி போன்ற அரங்கமைப்பை சென்னையில் உருவாக்கினர். அங்கு தான் காலா படத்தின் முழுமையான படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தை தயாரித்துள்ள வுண்டர்பார் ஃபிலிம்ப்ஸ் நிறுவனத்தின் யூ-டியூப் பக்கத்தில், காலாவின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அது தற்போது பலரும் பார்த்து வருகின்றனர்.