ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்களை திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளம் பெண்!!

ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம் பெண் தங்கள் கலாச்சார வழக்கப்படி உயிரிழந்த கணவரின் சகோதரரை திருமணம் செய்த நிலையில் தாலிபான் தீவிரவாதிகளிடம் இரண்டு கணவர்களை இழந்துள்ளார்.கடீஜா (18) என்ற இளம் பெண்ணுக்கு ஆறு வயது இருக்கும் போதும் அவர் குடும்பத்தார் அவரை விட 15 வயது மூத்தவரான ஹக் என்பதை திருமணம் செய்து வைத்தனர்.ஊரில் மரவேலை செய்து வந்த ஹக் அங்குள்ள தாலிபான் தீவிரவாதிகளால் மூளை சலவை செய்யப்பட்டார்.

இதையடுத்து அந்த இயக்கத்தில் உளவாளியாக சேர்ந்தார். இந்நிலையில் கடந்த 2010-ல் நடந்த தாக்குதலில் ஹக் உயிரிழந்தார்.இதையடுத்து விதவையான கடீஜா மறுமணம் செய்ய வேண்டும் என குடும்பத்தார் வலியுறுத்தினார்கள்.அவர்கள் ஊர் வழக்கப்படி, பெண்ணின் கணவர் இறந்தால், கணவரின் சகோதரரை அப்பெண் மறுமணம் செய்ய வேண்டும். அதன்படி பொலிஸ் பணியில் இருந்த ஹக்கின் சகோதரரான அமினுல்லாவை கடீஜா திருமணம் செய்தார்.இதையடுத்து கர்ப்பமான கடீஜா பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

கடந்த 2014-ல் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொலிசான அமினுல்லா கொலை செய்யப்பட்டார்.இதனால், கை குழந்தையுடன் இடிந்து போய் உட்கார்ந்தாவுக்கு அமினுல்லாவின் சகோதரர் சம்சுதின் கடந்த 2015-ல் வாழ்க்கை கொடுத்தார்.