இலங்கைக்கு இறக்குமதி செய்யும் டின் மீன்களில் புழு…..!

இலங்கை மக்கள் உள்நாட்டு உற்பத்திகளை பயன்படுத்துவது என்பது மிக அரிது. வெளிநாட்டு உற்பத்திகளை உண்பதன் மூலம் பல உடல் நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

ஆனால் இது மனிதர்களுக்கு புரிவதில்லை. KFC Chicken, Burger King, Mcdonald போன்ற வெளிநாட்டு உணவு பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கின்றனர்.

இதனடிப்படையில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கடலுனவுகள், டின் மீன்கள் போன்றவையும் தரமற்று வருகின்றமை மக்களிடையே தெரிவிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

இதன்போது, 171 கொள்கலன்களில் மனித பாவனைக்கு உதவாத டின் மீன்கள் இலங்கை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன் தரம் தொடர்பில் அறிந்துகொள்ளும் பொருட்டு, அதன் மாதிரிகள் விசேட பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த டின் மீன்களில் ஒரு வகை புழு இனம் காணப்படுவதாக ஆரம்பக்கட்ட பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நாட்டு மக்கள் டின் மீன்களை கொள்வனவு செய்யும் பொழுது முடியுமான வரை உள்நாட்டு உற்பத்திகளை கொள்வனவு செய்யுமாறும் சுகாதார பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.