வெட்டி விடுவதே அவர் வேலை: மெர்க்கலை மோசமாக விமர்சித்த சகோதரி!

மேகன் மெர்க்கலை அவரின் ஒன்று விட்ட சகோதரி சமந்தா மீண்டும் மோசமாக விமர்சித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரியை, மெர்க்கல் சமீபத்தில் திருமணம் செய்த நிலையில் அதிலிருந்தே மெர்க்கலை அவரின் ஒன்றுவிட்ட சகோதரியான சமந்தா விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய டுவிட்டர் பதிவில் மெர்க்கலை சமந்தா மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மெர்க்கல் ராஜ குடும்பத்தில் இணைந்ததற்கான A Coat of Arms எனப்படும் அதிகாரபூர்வ முத்திரை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதை விமர்சனம் செய்துள்ள சமந்தா, முத்திரையானது குழந்தைகள் பள்ளி வகுப்பறையில் யாரோ வரைந்தது போல உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், மெர்க்கல் தன்னுடன் பழகியவர்களிடம் தொடர்பை துண்டித்து கொள்வார், அப்படி தான் 30 ஆண்டுகள் பழகிய நெருங்கிய தோழியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்.

அவர் வேலையே நெருங்கி பழகுபவர்களை வெட்டி விடுவது தான், A Coat of Arms என்பது அர்த்தமில்லாத பரிசு மற்றும் யாருக்கும் உபயோகமில்லாதது என குறிப்பிட்டுள்ளார்.