பேருந்து மீது மரமொன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியத்தலாவை – ஹப்புத்தளை வீதி, கல்கந்தைப் பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பு – பதுளை வழித்தடத்தில் பயணிக்கும் பேருந்தே விபத்துக்கு உள்ளானது.விபத்தில் 24 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த மற்றுமொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







