அரசியல் வாதிகளின் எதிர்காலத்தை கணித்த பிரபல சோதிடருக்கு ஏற்பட்ட சோக முடிவு!!

இலங்கையின் பிரபல சோதிடரான நாத்தாண்டிய பீ.பி. பெரேரா, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கட்டுவ ரயில் நிலையத்திற்கு அருகில் இவர் ரயிலுக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ரயில் பாதைக்கு அருகில் அமர்ந்திருந்த சோதிடர் கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி சென்ற ரயிலுக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

சோதிடர் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாது காரணத்தினால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பீ.பி. பெரேரா, இலங்கையின் பிரபலமான அரசியல்வாதிகளின் ஆஸ்தான சோதிடராக இருந்துள்ளார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.