இணையத்தள குறுஞ்செய்தி சேவையை அறிமுகம் செய்யும் யூடியூப்!!

உலகின் முன்னணி வீடியோ தளமாகத் திகழும் யூடியூப் ஆனது குறுஞ்செய்தி சேவையினை ஆரம்பிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.இணையத்தளம் மூலமாக மாத்திரம் இச் சேவை வழங்கப்படவுள்ளது.இதன் ஊடாக யூடியூப் மாத்திரமன்றி கூகுளின் எந்தவொரு கணக்கிலிருந்தும் குறுஞ்செய்தியை பரிமாறிக்கொள்ள முடியும்.

வீடியோ இணைப்புக்களை பகிர்தல், அவை தொடர்பில் கருத்துக்களை தெரிவித்தல் போன்றவற்றிற்காகவே இச் சேவை அறிமுகம் செய்யப்படுகின்றது.தற்போது சட் செய்யும் வசதி யூடியூப்பில் காணப்படுகின்றதனால், புதிய குறுஞ்செய்தி சேவை எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.