ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி விஜயம்!

இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கரடிப்போக்கு சந்தியில் உள்ள விகாரையில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கிளிநொச்சி அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலமையில் இடம் பெறுகின்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்

இன் நிகழ்வில் அமைச்சர்களான சுவாமிநாதன், விஜயகலா ,பாராளுமன்ற உறுப்பினர் களான சிறிதரன், மாவை சேனாதிராஜா வடமாகாண சபை உறுப்பினர்கள் ,பிரதேச சபை தவிசளர்கள் திணைக்களங்களின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்