மன்னார் மாவட்டத்துக்குப் பெரும்பான்மை இனத்தவரையே மீண்டும் மாவட்டச் செயலராக நியமிக்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் தமிழர்களை மாவட்டச் செயலர்களாக நியமிக்கத் தலைமை அமைச்சர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலும் அதனை மீறி பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே மன்னார் மாவட்டத்தின் மாவட்டச் செயலராகத் தற்போது சிபார்சு செய்யப்பட்டுள்ளார்.
இதுதவிர, முல்லைத்தீவு மாவட்ட செயலர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்டச் செயலராவும், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் அமைச்சு ஒன்றின் செயலாளராகவும் நியமிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டச் செயலராக பெரும்பான்மையின அதிகாரி நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால் அது இழுபறியில் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயத்திலும் இனக்க அரசியல் என்று கூறி சிங்கள அரச அதிபரை கூட்டமைப்பு நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறும் அவதானிகள் வரலாற்றில் என்றுமில்லாத அளவில் கூட்டமைப்பின் இனக்க அரசியல் காலத்தில் அதிகளவான சிங்கள மயமாதல் நடை பெறுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.






