டோனியின் பதிலால் வாயடைத்து போன நிரூபர்கள்!

பந்துவீச்சாளர்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சென்னை அணி தலைவர் டோனி அசத்தலாக பதிலளித்துள்ளார்.

11-வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று சென்னை – ஹைதராபாத் அணிகள் இறுதி போட்டியில் மோதவுள்ளன.

இந்த தொடரில் தனது திறமையான கேப்டன்ஷிப்பால் டோனி சென்னை அணியை இறுதி போட்டிக்கு அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னதான செய்தியாளர் சந்திப்பின் போது சென்னை அணியில் பந்துவீச்சாளர்கள் சரியாக பயன்படுத்தப்படுகிறார்களா என்ற கேள்வி டோனியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த டோனி, என் வீட்டில் நிறைய காரும், பைக்கும் இருக்கிறது. அதற்காக அனைத்தையும் என்னால் ஒரே நேரத்தில் எப்படி ஓட்ட முடியும்?.

பந்துவீச்சாளர்களும் அப்படியே, எதிர் அணி பேட்ஸ்மேன்களை பொறுத்தே பந்துவீச்சாளர்கள் களம் இறக்கப்படுகிறார்கள்.

அந்த குறிப்பிட்ட நேரத்தில் எடுக்கப்படும் முடிவின் படியே பந்துவீச்சாளர்கள் தேர்வு இருக்கிறது என பதிலளித்தார்.