60 வைரங்கள் அடங்கிய வளையலோடு மெகான் சீமாட்டி!

சமீபத்தில் திருமணம் முடித்து இளவரசியான மெகான் மார்கிள் சீமாட்டி. சுமார் 60 வைரங்கள் அடங்கிய வளையலோடு இளவரசர் சார்லஸ் அவர்களின் 70வது பிறந்த தினத்திற்கு சென்றுள்ளார். இந்த வைர வளையலை இளவரசர் ஹரி அவர்கள் மெகானுக்கு பரிசாக வழங்கி இருந்தார். இது விலைமதிப்பற்றது. பல லட்சம் கோடி பெறுமதி என்கிறார்கள்.

சமீபத்தில் திருமணம் முடிந்த புது மனது தம்பதிகள் ஹரி- மேகன் தம்பதிகள் முதன் முறையாக இளவரசர் சார்ள்ஸின் எழுபதாவது பிறந்ததினத்தில் கலந்துகொண்டிருந்தனர்.. பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பங்கிங்காம் அரண்மனையில் பெரிய அளவில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மேகன் அரச உடையில் இளவரசி போல காட்சியளித்திருந்தார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அரண்மனைக்கு வந்திருந்த மேகன் கையில் ஹரி பரிசளித்திருந்த அறுபது வைரங்கள் பதித்த வளையல் அணிந்து வந்திருந்தார். புது மணப்பெண்ணாக அரண்மனையில் வலம் வந்த மேகன் பார்ப்போர் கண் கவரும் அளவு ஜொலி ஜொலித்தார்.