தந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக வந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த க.மிதுசன் (வயது–-22) என்ற இளைஞனே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
வவுனியா நகரிலிருந்து வாரிக்குட்டியூருக்கு நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வாகனத்தில் சென்றுள்ளார்.
வாகனத்தைச் சுத்தம் செய்வதற்காக, சுத்தம் செய்யும் இயந்திரத்தின் ஆளியை அழுத்தியுள்ளார்.
இதன்போது மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி அவர் தூக்கி வீசப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அவரை உடனடியாக வைத்தியசாலையில் சேர்ப்பித்தபோதும் அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.