அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆபத்து! வெளிவந்த புதிய தகவல்

உள்நாட்டு பால் உற்பத்தித் துறையை மேம்படுத்தும் நோக்கில் கடந்த பல வருடங்களாக கறவை பசுக்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற கறவை பசுக்கள் பெரும்பாலும் நோய்த் தன்மைகளுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கறவை பசுக்களால் உற்பத்தி செய்யப்படும் பாலை குடிப்பதன் மூலம் நுரையீரல் சார்ந்ததும் மற்றும் பல நோய்களும் ஏற்படக்கூடும் என ஆய்வறிக்கைகள் மூலம் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கறவை பசுக்களிடம் இருந்து பெறப்பட்ட சில மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலமே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.