பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்! திகைப்பில் பொலிஸார்

கொழும்பை சேர்ந்த இளம் பெண் ஒருவரின் செயற்பாடு காரணமாக பொலிஸார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

விமான பணிப்பெண் என கூறி பல்வேறு நபர்களுக்கு எதிராக போலி முறைப்பாடு செய்யும் இளம் பெண்ணின் செயற்பாடு காரணமாக அனுராதபுரம் தலைமை பொலிஸ் பிரிவுகளின் அதிகாரிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த தான் விமான பணிப்பெண் என கூறி பொலிஸ் அதிகரியுடன் ஆங்கிலத்தில் பேசும் இந்த பெண் பின்னர் ஆபாசமான வார்த்தைகளிலும் பேசியுள்ளார்.

அத்துடன் அனுராதபுரம் பொலிஸ் அதிகாரிகள் உரிய முறையில் சேவை செய்வதில்லை என கூறி உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு முறையிடுவதனால் பொலிஸார் திகைத்து போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தான் கொழும்பை சேர்ந்தவர் எனவும், விமான பணிப்பெண்ணாக சேவை செய்வதாகவும் கூறும் இந்த பெண், அனுராதபுரத்தின் பல பகுதிகளில் வாடகைக்கு வீடு பெற்று கொள்கின்றார். பின்னர் அந்த வீடுகளுக்கு வாடகை பணம் செலுத்தாமல் வீட்டின் உரிமையாளர் தன்னிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாகவும், தன்னிடம் திருடியதாகவும், தன்மை தாக்கியதாகவும் கூறி பொலிஸ் நிலையத்தில் போலி முறைப்பாடு செய்துள்ளார்.

இதனால் வாடகைக்கு வீடு வழங்கிய வீட்டு உரிமையாளர்கள் காரணமின்றி சிக்கலில் சிக்கி கொள்வதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் போலியானதென தெரியவந்துள்ளது. இருந்த போதிலும், உயர் பொலிஸ் அதிகாரி அவரது போலி முறைப்பாடுகளுக்கு ஏமாற்றப்பட்டுள்ளமையினால் பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.