உலகில் இந்த இடது கை பழக்கமுள்ளவர்கள் தொகை மிகவும் குறைவே. இவர்கள் வலது கை பழக்கமுள்ளவர்களிலும் பார்க்க முள்ளிலையில் இருப்பார்கள்.அவர்களது சிந்தனை மாறுபட்டுக் காணப்படும் உலகில் பல பெரிய நிலையில் உள்ளவர்கள் இடதுகை பழக்கம் கொண்டவர்களாவர். தற்கால உலகில் இதற்கு உதாரணமாக பரக் ஒபாமா திகழ்கிறார் இவரும் ஓர் இடது கைப்பழக்கம் உடைய நபராவார்.
இடது கை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்கிறார்கள். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள்.
இவ் இடதுகைப்பழக்கம் மரபியல் மட்டுமல்ல
இவ் இடது கைப்பழக்கம் மரபியல், குடும்ப உறவுகளிலிருந்து உருவாகிறது என ஒரு கருத்து உண்டு ஆனால் இது மரபியலால் மட்டும் உருவாவதில்லை மரபியல் 25வீதமே இதில் பங்கெடுக்கின்றது. சில சமயங்களில் இது இரட்டையர்களிடம் வரலாம். மேலும் வலது மூலையின் செற்பாடு கூடுதலாக இருப்பினும் ஏற்படலாம்.
உடலளவிலும் கூட சமநிலையை கட்டடுப்பாட்டில் வைத்திருப்பதில் இவர்கள் மேலோங்கிக் காணப்படுகிறார்கள். வலது கை பழக்கமுள்ளவர்களால் இடது கையால் வேலை செய்வது கடினம், ஆனால் இடது பழக்கம் உள்ளவர்கள் எளிதாக வலது கையாலும் வேலை செய்வார்கள்.
இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு விரைவாக கோபம் வந்துவிடும். இவர்களது மூளை வேகமாக செயல்படுவது தான் இதற்கான காரணம் என கூறப்படுகிறது.வலது கை பழக்கம் உள்ளவர்களோடு ஒப்பிடுகையில் சராசரியாக 4-5 மாதங்களுக்கு முன்னரே இடது கை பழக்கம் உள்ளவர்கள் வயது வந்துவிடுகிறார்கள்.
மேலும் இடது கைப்பழக்கம் உள்ளவர்கள் வலது கைப் பழக்கம் உள்ளவர்களை விட விரைவாக சிந்திக்கிறார்கள் என்பது அவுஸ்திரேலிய விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் முடிவாகும். இடது கைப்பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகங்களையும் பயன்படுத்த முடிவதாகவும், விரைவாக தகவல்களை மூளைக்கு அனுப்பிப் பெற முடிவதாகவும் அவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இடது பழக்கமுடையவர்கள் பெரும்பாலும் விளையாட்டுக்களில் வல்லவர்களாக இருப்பார் அதாவது அதிகமானவர்கள் வலதுகைப்பழக்கம் உடையவர்களாக இருப்பதனால் இடது கைப்பழக்கமுடையவர்கள் இலகுவாக முன்னேற கூடியதாக இருக்கும்.
மேலும் இடதுகைப் பழக்கம் உடையவர்களுக்கு மார்பக புற்று நோய் அதிகம் வர வாய்ப்புண்டு. வலது கைப்பழக்கமுடைய பெண்களை விட இடதுகைப்பழக்கமுடைய பெண்கள் 2வீதம் அதிகமாக மார்பக புற்றுநோயால் பாதிப்படைகிறனர்.
இடதுகைப்பழக்கமுடையவர்கள் விரைவாக பயப்பிடும் தன்மை கொண்டவர்களாகவும் காணப்படுவார். மற்றும் இவர்கள் வித்தியாசமான ரசனை கொண்டவர்களாகவும் காணப்படுவார்.