புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக புத்தளம்- கொழும்பு பிரதான வீதி பத்துளு ஓயா 61 ஆவது மைல் பிரதேசத்தில் நீரில் மூழ்கியதால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நேற்று மாலை வரை பெய்த மழையினால் இன்று திங்கட்கிழமை காலை முதல் பத்துளு ஓயா சந்தியிலிருந்து நீண்ட தூரத்திற்கு இவ்வாறு வீதி நீரில் மூழ்கியிருந்தது.
இந்த வீதியின் சில இடங்களில் சுமார் இரண்டு அடிக்கு அளவில் நீர் பாய்ந்தோடிதோடு ஏனைய இடங்களில் ஒரு அடிவரையில் வெள்ளத்தில் வீதி மூழ்கியிருந்தது.
இதனால் அவ்வீதி வழியிலான வாகனப் போக்குவரத்தின் போது வாகனச் சாரதிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







