கர்ப்பமாக இருக்கும் போது மாங்காயை விரும்புவதனால் இத்தனை நன்மைகளா?

கர்ப்காலத்தில் பொதுவாக பெண்கள் மாங்காயை அதிகம் விரும்புவார்கள் அதற்கு மாங்காயின் புளிப்பும்,இனிப்பும் கலந்த சுவையே காரணம்.இதனால் கர்க்க காலத்தில் ஏற்படும் குமட்டல் போன்றவற்றிற்கு சிறந்தது. ஆனால் இது மட்டுமல்ல மாங்காயில் இரும்பு, போலிக் அமிலம், விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் பி6, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற கர்ப்ப காலத்தில் தேவையான விட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளது.

கர்ப்ப காலத்தில் மாம்பழம் அனீமியாவை தடுக்கிறது.

அனீமியா பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஒரு நோயாகும். கர்ப்பிணிப் பெண்களுக்கு இரத்த சோகை தடுக்க இரும்புச் சத்து சேர்க்க வேண்டும், அதற்கு பதிலாக, மாம்பழத்தை உட்கொள்ளலாம் இது இரும்பு சத்தை வழங்குகிறது. கர்ப்பிணிப் பெண்களில் இரத்த சிவப்பணு எண்ணிக்கையை அதிகரிக்க நாள் ஒன்றுக்கு 2 மாம்பழங்களை தினமும் உட்கொள்வதன் மூலம் இரத்த சோகை வருவதையும் தடுக்கலாம்.

மாம்பழம் கரு வளர்ச்சிக்கு அவசியமானது

மாம்பழத்தில் கரு வளர்ச்சிக்கு அவசியமான போலிக்அமிலம் உள்ளது.அது மூன்று மாதங்களுக்கு நிகழும் நரம்பு மண்டல மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கர்ப்ப காலத்தில் நிகழும் நரம்புக் குழாய் குறைபாட்டை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை தடுக்கிறது.

மாம்பழத்தில் நார்ச்சத்து காணப்படுவதால் இது கர்ப்பகாலத்தில் ஏற்படும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
மேலும் கர்ப்பகாலத்தில் அதிகளவான மாம்பழங்கள் உண்பதைத் தவிர்க்கும் படி கூறுவார்கள் ஏனெனில் அதிக நார்த்தன்மையினால் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு எனவேதான் மாம்பழத்தை அளவுடன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விட்டமின் சி உள்ளது

விட்டமின் சி ஒரு நல்ல ஒக்சிசனேற்றியாக தொழிற்படும். இது குழந்தையின் வளர்ச்சியில் பெரிதும் உதவும் குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனைகளான உயர் இரத்த அழுத்தம், குறைபிரசவம், குழந்தை இறந்து பிறத்தல், பிறந்தபின் குழந்தையின் மரணம், குழந்தையின் எடை குறைவு போன்றவற்றை தவிர்க்கலாம்.

மாம்பழத்தில் விட்டமின் ஏ உள்ளது

வைட்டமின் ஏ ஒரு முக்கிய விட்டமின். இது கர்ப்பத்தின் போது குழந்தையின் உடலில் குறிப்பாக வளர்ச்சியை கொண்டுவரும். இந்த விட்டமின் குழந்தையின் எலும்பு மற்றும் பற்களின் உருவாக்கம் மற்றும் குழந்தையின் கண்களின் ஆரோக்கியத்திற்கும் அவற்றின் நோயெதிர்ப்பு அமைப்புக்கும் இன்றியமையாதது. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் போதுமான விட்டமின் ஏ கிடைக்கவில்லையென்றால், குழந்தைக்கு பார்வை பிரச்சனை இருக்கும். இருப்பினும், அதிக அளவு குழந்தைக்கு கல்லீரல் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் எனவே அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்பமாக உள்ள பெண்கள் நாளொன்றிற்கு இரண்டு மாம்பழங்கள் வரை உட்கொள்ளலாம் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.