விடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்பில் பொலிஸார் விசாரணை

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தியமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது குறித்து பொலிஸார் இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தெற்கில் யுத்தவெற்றியை கொண்டாடும் நோக்குடன் சில இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகளை நேற்று நடுவீதியில் போட்டு கால்களினால் மிதித்து எரித்துள்ளனர்.

இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்று மாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

14815-1-c8be02a4f8a2232d14cc87fbe7ae48e1 விடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்பில் பொலிஸார் விசாரணை விடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்பில் பொலிஸார் விசாரணை 14815 1 c8be02a4f8a2232d14cc87fbe7ae48e1

முள்ளி வாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீருடையும் நிறை வெறியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும்!

14816-0-4eab4bf9d5fcaa4be0d77e96a3ef2a12 விடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்பில் பொலிஸார் விசாரணை விடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்பில் பொலிஸார் விசாரணை 14816 0 4eab4bf9d5fcaa4be0d77e96a3ef2a12

முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த 18ம் திகதி விடுதலைப்புலிகளின் தொப்பியை வைத்து சிலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இந் நிலையில் அவ்வாறு அஞ்சலி செலுத்தியவர்களும் அதைப் புகைப்படம் எடுத்தவர்களும் இலங்கைப் புலனாய்வாளர்களால் பிடிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

அஞ்சலி செலுத்தியவர்களை புகைப்படம் எடுத்த அவர்களின் நண்பர்களில் ஒருவரே புலனாய்வாளரிடம் முதலில் சிக்கிக் கொண்டார். சிக்கியவுடன் அவர் செய்த முதல் வேலை ஏனையவர்களையும் உடனடியாகக் காட்டிக் கொடுத்ததுதான்.

பிடிக்கப்பட்ட நண்பரால் காட்டிக் கொடுக்கப்பட்டவர்களும் பிடிபட்டவர்களும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பவர்கள் என புலனாய்வாளர்களின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களை கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது அவர்கள் அழுது குழறி குறித்த புலனாய்வாளர்களிடம் கெஞ்சியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

இவர்கள் பிடிபட்டது தொடர்பாக கொழும்பிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புக்கு இணங்க புலனாய்வாளர்கள் குறித்த மாணவர்களை விடுவித்துள்ளனராம்.

பிடிக்கப்பட்ட மாணவர்களை கொழும்பு விடுவித்ததில் சந்தேகம் நிலவுவதாக தெரியவருகின்றது. குறித்த மாணவர்கள் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தினர் என காரணம் காட்டி அடுத்த முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முற்றிலுமாக குழப்பியடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் முயலக்கூடும் எனவும் சந்தேகம் வலுத்துள்ளது.

இதே வேளை முள்ளிவாய்கால் நிகழ்வு முடிந்து வெளியேறிய மாணவர்களில் குறிப்பிட்டத்தக்கவர்கள் கடும் மது போதையிலேயே மோட்டார் சைக்கிளில் தமது இருப்பிடத்துக்கு சென்றுள்ளர்.

இவர்களில் இருவர் முல்லைத்தீவு தேராவில் பகுதியில் சாராய வெறியில் விபத்துக்குள்ளாகியதாகவும் அவர்களை அப்பகுதியில் நின்ற படையினர் துாக்கிச் சென்று தமது முகாமில் வைத்து சிகிச்சை அளித்து வெறி முறிந்த பின்னரே மோட்டார் சைக்கிளில் வீடு செல்ல அனுப்பியதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களில் சிலர் பரந்தன் பகுதியில் கடும் போதையில் தவறான பக்கத்தால் மோட்டார் சைக்கிள் ஓடியதால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து குழம்பியுள்ளது. சில மாணவர்கள் பரந்தன் பூநகரிப் பாதையில் அதி வேகமாக மோட்டார் சைக்கிள் ஓடிச் சென்றதையும் மக்கள் கலக்கத்துடன் பார்த்துள்ளனர்.

இதே வேளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் கதாநாயகர்கள் போலவும் புலிகளின் கரும்புலிகள் போலவும் தம்மை உருவகித்து நின்றதைப் பார்க்கும் போது இலங்கை அரசாங்கத்தின் வழி நடத்தலில் குறித்த மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளைக் குழப்புவதற்காக படையினரால் திட்டமிட்டு அனுப்பப்பட்டார்களோ என சந்தேகம் நிலவுவதாகவும் முள்ளிவாய்க்கால் பகுதியில் நின்ற தமிழ் உணர்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவர்களில் பெருமளவானர்வர்கள் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலைப்பீட மாணவர்கள் எனவும் இவர்கள் பட்டதாரியானவுடன் வேலை வாய்ப்புக்கள் இல்லாது அலையும் பீடத்தைச் சேர்ந்தவர்களாகையால் இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்து இலங்கை அரசாங்கமே இவர்களை தவறான முறையில் கையாண்டிருக்கலாம் எனவும் சந்தேகம் நிலவுகின்றது.