முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளில் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய தகவல்கள் திரட்டும் வகையில் தனித்த இணையத்தளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழர் தேசத்தின் மீதான ஸ்ரீலங்கா படையினது ஆக்கிரமிப்பு தமிழின அழிப்பின் போது 146 679 பேர் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் 450வது நாட்களைக் கடந்து அறவழியில் தமது போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் http://youarenotforgotten.org/ என்ற இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவேந்தி பிரான்சின் ஆர்ஜொன்தெய் பகுதியில் நடப்பட்டுள்ள நினைவேந்தல் மரத்தின் வணக்க நிகழ்வில் மக்கள் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கீழ் வரும் விபரங்களுக்கு அமைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தரவுகளை பதிவேற்றம் செய்ய முடியும் இதன் ஒருங்கிணைப்பாளர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
01. எமது இணயத்தளத்திற்கு செல்லவும் http://youarenotforgotten.org/
02.“Add Disappear person” என்னும் மெனுவுக்கு செல்லவும். அல்லது இந்த இணைப்புக்கு செல்லவும். http://youarenotforgotten.org/add-disappear-person/
03. அந்த பக்கத்தில் உள்ள ‘form’ பொத்தானை அழுத்தி காணாமலாக்கப்பட்ட நபரின் விபரங்களை நிரப்பும் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
04. காணாமலாக்கப்பட்டவரின் புகைப்படம் இருப்பின் கீழே உள்ள ‘Photo ‘ பொத்தானை அழுத்தி அதனை இணைக்கவும்.
05. பதிவிறக்கம் செய்த படிவத்தினை பூர்த்தி செய்து அப்படிவத்தினை Scan அல்லது கைத்தொலைபேசியில் புகைப்படமெடுத்து கொள்ளவும்.
06. பின்னர் ‘Details ‘ என்றும் பொத்தானை அனுப்பி படிவத்தினை இணைக்கவும்.
07. பின்னர் ‘SUBMIT’ என்னும் பொத்தானை அழுத்தவும்.






