பெரும் நெருக்கடியில் அரசாங்கம்!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள செயற்கை தீவை தமக்கு வழங்காவிடில் அடுத்த தவணை பணமான 500 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை கொடுக்க போவதில்லை என சீன நிறுவனம், இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீவானது சீனாவிற்கு துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கிய பின்னர் உடன்படிக்கைக்கு உட்பட்டது என சீனா கூறி வருகிறது. ஆனால் இந்த தீவு இலங்கையின் எல்லைக்குரிய தீவு என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு, தென் மாகாண சபையின் அனுமதியும் பெற்றுக்கொளவது மிகவும் அவசியமானது.

இருப்பினும் சீனாவுக்கு வழங்குவற்கு தென் மாகாண சபை கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில் சீன நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் குறித்த செயற்கை தீவானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் 60 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 110 ஹெக்டேயர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த தீவில் சுற்றுலா விடுதிகள், களியாட்ட நிலையங்களை நிர்மாணிப்பது என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருப்பதுடன் அத்தீவின் தற்போதைய பெறுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலரை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.