மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா!

காலை உணவை எடுத்துக்கொள்ளாமை மற்றும் போக்குவரத்து சூழல் மாசு போன்றவற்றினால் மனச்சோர்வடைந்து எரிச்சல் உண்டாகிறது. இதனால் கோபம், தலைவலி உண்டாகும்.இதனால் இயல்பு வாழ்க்கை குழப்பமடையும்.

அமர்ந்த வண்ணம் தலையை மசாஜ் செய்யவும்

முதுகெலும்பு மற்றும் தலையை நேராக வைத்திருங்கள்
உள்ளே மூச்சை எடுத்து, வலது கை உயர்த்துங்கள்.
தலையின் மேல் பக்கத்திலிருந்து கையை வைக்கவும்
ஒரு சுழற்சி முறையில் மெதுவாக மெல்லமாக மசாஜ் செய்யவும்.(ஒரே திசையில்)
உடற்பயிற்சி முழுவதும் சுமூகமான மற்றும் ஆழமான சுவாசத்தை எடுங்கள்.
சிறிது நேரம் அதே நிலையில் மசாஜ் செய்ய உடல் சற்று தளர்வான நிலையை உணரும்.

உங்கள் கண்களுக்கான பயிற்சியை வழங்குங்கள்

கண்களை விரைவாக திறந்து மூடுங்கள்
பின் கண்களை திறந்தபடி புருவங்களை மேல் கீழாக அசையுங்கள்.
கண்களுக்கு ஆழமான பார்வை யை கொடுங்கள்
இம்முறைகளை மீண்டும் மீண்டும் செய்யுங்கள்.
இந்த பயிற்சியின்போதும் ஆழமான சுவாசத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் தாடைக்கான பயிற்சியை வழங்குங்கள்.

உங்கள் தாடையை தளர்வாக வைத்திருங்கள்.
கை விரவ்களிகால் தாடையிலிருந்து மேல் நோக்கி மெதுவாக அழுத்துங்கள்.
உங்கள் தாடை அசையும் படி வாயைத் திறந்து மூடுங்கள்.
தாடை பஙிற்சியை சில நொடிகள் மீண்டும் செய்யுங்கள்.
முஞ பயிற்சியின் போதும் ஆழமான சுவாசத்தை வைத்திருங்கள்.

உங்கள் கழுத்திற்கான பயிற்சியை வழங்குங்குங்கள்

உங்கள் முதுகெலும்பு, கழுத்து மற்றும் தலை பகுதிகளை நிமிர்த்தி நிற்கவும்
உங்கள் தொண்டை மற்றும் உங்கள் கழுத்து தசைகளை அசைத்து சுழற்றுங்கள்.
பயிற்சி முழுவதும் ஆழமாக சுவாசியுங்கள்.

தோலிற்கு பயிற்சி கொடுத்தல்

ஆழமான சுவாசத்தோடு உங்கள் கைகளை மேல் கீழாக அசையுங்கள்.
சற்று நெரத்திற்கு மீண்டும் மீண்டும் செயற்படுத்துங்கள்.
மெல் கீழாக மட்டுமின்றி பக்கங்களிழும் கைகளை அசையுங்கள்.

மேலும் உங்கள் உடலை வேகமாக அசையுங்கள் சுழற்சி முறையில் வளையுங்கள்.பத்து நிமிட இடைவெளிகளில் இவற்றை மேற்கொண்டால் அழுத்தம் குறைவடையும்.தினமும் இவ்வாறான யோகவில் ஈடுபடுவதால் மன அழுத்தங்கள் குறைந்து இயல்பான வாழ்க்கை வாழலாம்.