உணவில் உப்பு அதிகரித்தால் என்ன பிரச்சனை வரும் தெரியுமா?

அறுசுவைக்கும் தலைவனாய் திகழும் உப்பு, நம் உயிரையும் சுவைப் பார்க்க காத்திருகிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும்.

  • உங்கள் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வதன் மூலமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும். இது மற்றுமின்றி சிறுநீரகம், வயிறு சார்ந்த கோளாறுகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
  • நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு 4 மி.கிராம் அளவைத் தாண்டினால், அது சிறுநீரகத்தை பாதிக்கும்.
  • உங்களது உடலில் உப்புச்சத்து அதிகரிக்கும் போது பக்கவாதமும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
  • உடலில் உப்புச்சத்து அதிகரிக்கும் போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும் , இதன் காரணமாக உங்களுக்கு நீரிழிவு நோய் அதிகரிக்கும். எனவே, இரத்த கொதிப்பு இருப்பவர்கள் உணவில் கட்டாயம் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள்.
  • பெரும்பாலும் சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்களுக்கு அவர்களது உடலில் உப்புச்சத்து அதிகமாக காணப்படுகிறது.
  • இவையெல்லாம் உணவில் உப்பை அதிகமாக சேர்த்துக் கொள்ளவதால் வரும் பிரச்சனைகள். இதை தவிர்க்க ஒரேடியாக உணவில் உப்பை குறைத்து விடவும் கூடாது. உடலுக்கு தேவையான உப்பின் அளவை குறைத்தால் அது உயிருக்கே ஆபத்து ஆகிவிடும் என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
  • இதனால் ஒரே தீர்வு உணவில் சீரான அளவு உப்பு எடுத்துக் கொள்வது தான். அதே போல் முடிந்த வரை ஊறுக்காயை தவிர்ப்பது மிகவும் நல்லது.