அரசியலின் அதிரடி திருப்பங்கள்! நடிகர் பிரகாஷ் ராஜ் சொன்னது என்ன?

அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் கர்நாடகாவில் தொடங்கியுள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இன்று காலை 23வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்- மஜத கட்சியின் எம்எல்ஏக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள டுவிட்டில், அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் கர்நாடகாவில் தொடங்கிவிட்டது.

யார் எங்கு தாவினார்கள்? யார் எங்கு தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்? என்ற செய்திகள் வெளிவரத் தொடங்கும்.

அரசியல் சாணக்கியங்களை கண்டுகளியுங்கள் என தெரிவித்துள்ளார்.