யாழில் நடந்த பெரும் துயரம் – தீயில் கருகி யுவதி மரணம்!

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணுவில் மேற்கு, இணுவிலைச் சேர்ந்த 21 வயதான சீலன் அஸ்வினி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நெருப்புத் தணல் உள்ளது என்று தெரியாது அடுப்பில் விறகு வைத்து மண்ணெண்ணை ஊற்றிய போது தீப்பற்றி எரிந்ததில் குறித்த யுவதி காயமடைந்துள்ளார். இந்த அனர்த்தம் கடந்த ஆறாம் திகதி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சையின் பலனின்று நேற்று முன்தினம் உயிரிழந்ததாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மரண விசாரணையை திடீர் விசாரணை விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.