டிரம்ப் மனைவி மெலானியா மருத்துவமனையில் அனுமதி!

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மனைவி மெலானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் முதல் பெண்மணியாக கருதப்பட்டு வரும் மெலானியா டிரம்ப்(48) கடந்த சில தினங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், மெலானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி அது தொடர்பான அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும், சிக்கல்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அடுத்த ஒருவார காலம் அவர் ஓய்வில் இருப்பார் எனவும் அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமது மனைவியை சந்திக்கும் பொருட்டு ஜனாதிபதி டிரம்ப் குறித்த மருத்துவமனைக்கு செல்ல உள்ளதாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வரும் மெலானியா வால்டர் ரீட் தேசிய மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.