மீண்டும் நெருக்கமான நயன்-விக்னேஷ் படங்கள்…

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ்சிவனும் நீண்ட நாட்களாக நெருங்கி பழகி வருகிறார்கள். ஜோடியாக பலநாடுகளுக்கும் சென்று வருகிறார்கள்.

சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா, தனது எதிர்கால கணவர் என்று விக்னேஷ் சிவனை குறிப்பிட்டார். இதையடுத்து, காதலர்களான இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

நயன்தாரா-விக்னேஷ்சிவன் ஜோடி பற்றி எந்த செய்தி வெளியானாலும் இருவருமே கண்டு கொள்வதே இல்லை. சில நாட்கள் விடுமுறை கிடைத்தாலும் வெளிநாடுகளுக்கு ஜாலிடூர் கிளம்பி விடுகிறார்கள். அந்த படங்களை தங்கள் டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டு மகிழ்ச்சி அடைக்கிறார்கள்.

Nayantara-VignesShivan-2  மீண்டும் நெருக்கமான நயன்-விக்னேஷ் படங்கள்… Nayantara VignesShivan 2

கடந்த மாதம் பட தயாரிப்பாளர் வேலை நிறுத்தம் காரணமாக நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஓய்வு கிடைத்தது. இதையடுத்து இருவரும் மீண்டும் அமெரிக்கா பறந்தார்கள்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இன்டியோ பகுதியில் நடந்த பிரபல கோச்செல்லா இசை-கலை விழாவில் இருவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்ட புகைப்படத்தை விக்னேஷ்சிவன் அவருடைய இன்ஸ்டாகிராம், டுவிட்டர் ஆகியவற்றில் வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார்.

அதில், ‘எனது நட்சத்திரத்துடன் சென்ற இசை பயணம் இனிய அனுபவம்’ என்று குறிப்பிட்டுள்ளார். நயன்தாராவும், விக்னேஷ் சிவன் தன்னை கட்டி அணைத்திருக்கும் படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்த படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.