சிங்கத்தின் கூண்டுக்குள் சிக்கி உயிர் பிழைத்த நபர்.. அதிர்ச்சி வீடியோ

ஆப்பிரிக்காவில் வனவிலங்கு காப்பகத்தில் சிங்கம் இருக்கும் இடத்தில் துர்நாற்றம் வீசியது. அதை கண்காணிக்க சென்ற வனவிலங்கு ஊழியர் சிங்கம் வேறு பகுதியை நோக்கிச்சென்றுள்ளதை அறிந்து, சிங்கத்தில் குகைக்குள் சென்றுள்ளார்.

இதை தொடர்ந்து கூண்டிற்குள் தைரியமாக பார்வையிட்ட அவருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. வேறு பக்கமாக சென்ற சிங்கம் அவர் இருப்பதை பார்த்து அவரை நோக்கி ஓடி வந்து, பாய்ந்துள்ளது.

பின் சிங்கம் அவரை கூண்டிற்குள் இழுத்து சென்றதை அறிந்த வாடிக்கையாளர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். தகவலறிந்த காப்பகத்தின் காவலர்கள் சிங்கத்தை விரட்ட துப்பாக்கியால் மேலே சுட்டனர்.

சிங்கம் அவரை இழுத்து செல்லும் வீடியோ வைரலாகி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.