வவுனியாவில் பெண்குரலில் பல ஆண்களுடன் தொலைபேசி, சமூகவலைத்தளங்களில் உரையாடி பண மோசடியில் ஈடுபட்ட நபரிடம் வவுனியா பொலிஸார் நேற்று(30.04.2018) விசாரணைகளை மேற்கொண்டனர்.
ஈழத்து நடிகையான திவ்யாவின் புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி தான் திவ்யா என தெரிவித்து பல ஆண்களுடன் பெண் குரலில் உரையாடி பல லட்சம் ரூபா பண மோசடி மேற்கொண்ட நபரிடம் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திவ்யாவின் குடும்பத்தாரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு இணங்க விசாரணைகளை மேற்கொண்ட சமயத்திலியே இவரை பொலிஸார் விசாரணைக்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.
இதன் போது நான் தான் திவ்யாவின் புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி பல ஆண்களுடன் கதைத்தாக குற்றத்தினை ஒத்துக்கொண்டுள்ளார்.
இவர் மூன்று வருடங்களாக இம் முகநூலை பாவித்துள்ளமையும் பல ஆண்களுடன் வீடியோ மூலம் கதைத்த ஆதாரங்களை முகநூலில் வெளியிடுவேன் என கதைத்துள்ள ஆதாரங்கள் அவரின் தொலைபேசியில் இருந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞனின் நலனை கருத்தில் கொண்டும் குற்றத்தினை ஒப்பு கொண்டுதாலும் இவரை மன்னித்து இரு தரப்பினரின் சம்மதத்துடன் பொலிஸார் விடுதலை செய்துள்ளனர்.






