வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு – சுருதிஹாசன் வேதனை

சுருதிஹாசனும், லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேல் என்பவரும் காதலித்து வரும் நிலையில், காதலரை பிரிவது வருத்தத்தை ஏற்படுத்துவதாக சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

சுருதிஹாசனின் பாய்பிரண்ட் மைக்கேல் கார்சேல். லண்டனை சேர்ந்த நாடக கலைஞரான இவருடன் சுருதி ஹாசன் நீண்ட நாட்களாக நெருங்கிப் பழகிவருகிறார்.

மைக்கேல் அடிக்கடி மும்பை வந்து சுருதியை சந்திக்கிறார். இது போல் சுருதிஹாசனும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் லண்டன் சென்று மைக்கேலை சந்தித்து வருகிறார்.

இருவரும் காதலிக்கிறார்கள். இவர்களுக்கு சுருதியின் அப்பா கமல், அம்மா சரிகா ஆகியோர் பச்சை கொடி காட்டிவிட்டார்கள். விரைவில் திருமணம் செய்து வைக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், இது பற்றி சுருதி-மைக்கேல் இருவரும் இதுவரை வாய்திறக்கவில்லை.

201804271510119617_1_ShrutiHaasan-Micheal2._L_styvpf வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை 201804271510119617 1 ShrutiHaasan Micheal2

இந்த நிலையில்,சமீபத்தில் மும்பை வந்த மைக்கேல், சுருதியை சந்தித்தார். சில நாட்கள்தங்கி இருந்துவிட்டு லண்டன் புறப்பட்டார்.

இது குறித்து மைக்கேல் அவரது டுவிட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு முறையும் மும்பையில் இருந்து கிளம்பும் போது கவலையாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல், சுருதிஹாசனும் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒருவர் நம்முடனேயே இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது, அவருக்கு விமானநிலையத்தில் குட்பை சொல்லுவதற்கு கடினமாக இருக்கிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.