வெசாக் மகோற்சவம் நாளை ஆரம்பம்!

அரச வெசாக் மகோற்சவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பங்களிப்புடன் குருணாகல் மாவட்டத்தின் பிங்கிரிய தேவகிரி மஹா விகாரையில் நாளை இடம்பெறும்.

இதனை முன்னிட்டு ரஜமஹா விகாரை வெகு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இம்முறை விகாரை மாத்திரமன்றி அரசஇ தனியார் நிறுவனங்களும் பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வீதிகளில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.

அரச வெசாக் மகோற்சவத்துடன் இணைந்ததாக தான, தர்ம, தியான நிகழ்ச்சிகள் ஏற்படாகியுள்ளன.

விசாக நோன்மதியை முன்னிட்டு அரசாங்கம் தேசிய வெசாக் வாரத்தை பிரகடனப்படுத்தியிருந்தது. வெசாக் வாரம் நேற்று ஆரம்பமானது.

இதற்குரிய நிகழ்ச்சிகள் மே மாதம் இரண்டாம் திகதி வரை நடைபெறும். அரச வெசாக் மகோற்சபத்துடன் இணைந்ததாக ஞாபகார்த்த முத்திரையும், அற நூல்களும் வெளியிடப்படவுள்ளன.

குருணாகல் மாவட்டம் முழுவதும் ஆன்மீக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அமுலாகின்றன. மொத்தமாக 300 அறநெறி பாடசாலைகளும்இ 250 விகாரைகளும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன